
தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றம், பிரபல ஜி.ஆர்.டி தங்கமாளிகை நிறுவனம் ஆக்கிரமித்து அமைத்த விளம்பர போர்டுகளை அகற்றியும், நடைப்பாதையை மீட்டது நெடுஞ்சாலை துறை
வார விடுமுறை நாட்களானலும், பண்டிகை காலங்களிலும் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை நெரிசலில் சிக்கி தவிக்கும்,
தாம்பரம் பெருங்களத்துரை தாண்டுவியா என மீம்ஸ் பரவும் நிலையில் நெரிசல் ஏற்படும்,
இந்த நிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு ஆட்சியர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர், மாநகராட்சியினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர்கள் ஒன்றாக நடத்தப்பட்ட கூட்டத்தில் முதலில் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இரண்டாம் நாளாக தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் நெடுஞ்சாலை மற்றும் நடைப்பாதைகளை ஆக்கிரமித்து தாழ்வாரங்கள், படிக்கட்டுகள், விளம்பர போர்டுகள் என பல்வேறு விதங்களில் ஆக்கிரமித்த இடங்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றி சாலையை அகலப்படுத்தினார்கள்.
இதில் பிரபல தங்கம் விற்கும் ஜி.ஆர்.டி தங்கமாளிகை கடை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ளது. இதன் முன்பாஜ நடைப்பாதையில் விளம்பர போட்டுகள் அமைத்தும், நடைப்பாதையில் அவர்களாக கான்கீரிட் கற்களை பதித்து ஆக்கிரமித்த இடத்தை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி அகலப்படுத்தினார்கள்.
அதுபோல் குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம் அனுகு சாலையில் ஏராளமான கடையினர் விளம்பர போட்டுகளை அமைத்து இருந்தனர். அதனையும் நெடுஞ்சாலை துறையினர் சாலையை அகலப்படுத்தினார்கள்.