தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி திருதேர் பவனி, சுவாமி தேனுபுரீஸ்வரர், தேனுகாம்பாள் தேரில் பவனி

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் 1200 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது,

பிரம்மோற்சவ திருவிழாவை யொட்டி எழாம் நாள் திருவிழாவாக தேர்திருவிழா நடைபெற்றது,

அளங்காரம் செய்யப்பட்ட தேரில் தேனுகாம்பள சமேத தேனுபுரீஸ்வரர் அமர்ந்தவாறு தேரில் வலம் வந்தார்,

பொய்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் சகல வாத்தியங்கள் முழங்க யானை வாகனம் முன்பாக முன்பாக செல்ல அதனை தொடர்ந்து வந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுந்துசென்றனர்,

திருத்தேரை திருவிழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது,

உபயதாரர்கள் ஏற்பாட்டில் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.