மதிப்பெண்கள் வாழ்கையின் முடிவல்ல. சாதிக்க பல துறைகள் உள்ளதால் மாணவர்கள் தவறான முடிவுக்கு போக கூடாது. தாம்பரத்தில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 598 எடுத்து சாதித்த மானவி பேட்டி.

சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் படித்த மாணவி தோஷிதா லட்சுமி பண்ணிரெண்டாம் வகுப்பில் ப்ரென்ச் பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்த நிலையில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600 க்கு 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கல்வி ஆர்வலர்களும் பள்ளி ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்து பொன்னாடை போத்தி மாலை அணிவித்தும் கவுரவித்தனர். பின்னர் பேட்டியளித்த மாணவி, மதிப்பெண்கள் என்பது வாழ்கையின் முடிவு அல்ல என்றும், அறிவுக்கும் மதிபெண்களுக்கும் தொடர்பில்லை என்பதால் அதனை வைத்து யாரும் விரக்தியடைய வேண்டியதில்லை என்றும் சாதிப்பதற்கு பல துறைகள் உள்ளதால் மதிப்பெண்களை பெரிய சாதனையாக நினைத்து மாணவர்கள் தவறான முடிவுக்கு போக கூடாது என்றார்.