அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 23ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலான 7 நாட்களில் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக தனித்தனியாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 57 கிலோ கஞ்சா, 6,984 போதை மாத்திரைகள், 3 செல்போன்கள், ரூ.22,500, 2 லகுரக வாகனம் செய்யப்பட்டது.