இதனை தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கேள்வி எழுப்பினார்.. அதன் தொடர்ச்சியாக மாநகராட்சியின் ஆணையாளர் அழகுமீனா இதனை பரிசீலித்து, பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, அமைச்சர் கே.என்.நேரு ஒப்புதலோடு,.எஸ்.ஆர்.ராஜா எம்.எல் ஏ வழிகாட்டுதலின் படி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளுக்கு பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளில் இது விநியோகிக்கப் படுகின்றது. பாலாற்றுத் தண்ணீர் வராத போது முதலமைச்சர் துவங்கி வைத்த கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்க்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றது.இந்த பணிக்கு உறுதுணையாக இருந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கும், மாநகராட்சியின் ஆணையர் மற்றும் பொறியாளர் பிரிவின் அதிகாரிகளுக்கும் பகுதிவாழ் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.