சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே உள்ள எஸ்டி கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நான்கு பேர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே எஸ்.டி கொரியர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.

இங்கு தினம் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் கொரியர் டெலிவரி செய்யவும் இங்கிருந்து விமான நிலையத்திற்கு கொரியர் சேவைக்காகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் எஸ்டி கொரியர் தலைமை அலுவலகத்திற்குள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனின் எஸ் டி கொரியரில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.