சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவு சேர்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு இன்று மாலை 5 மணிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து
கல்லூரி நிர்வாகம் 7 மணியளவில் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் இரண்டு வாசல்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதுபோல் சிட்லப்பாக்கத்தில் உள்ள எம்.ஐ.டி கல்லூரி கூடுதல் கட்டிடம் மாணவர்களின் விடுதிகளிலும் சோதனை செய்ய முடிவெடுத்த போலீசார் தாம்பரம் மாநகர காவல் ஆணையரக வெடிகுண்டு பிரிவு போலீசார் வருகை புரிந்த நிலையில் மாணவர்களின் வகுப்பறைகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கூடுதலாக சென்னை மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு மோப்ப நாய் லிங்கா எம்.ஐ.டி கல்லூரி வெடிகுண்டு கண்டுபிடிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஆண்கள், மகளிர் விடுதிகள் என இரவு முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டம் ஈ.மெயில் மூலம் விடுக்கப்பட்ட நிலையில் தற்போதும் அதுபோல் வந்துள்ளதாகவும் ஆனாலும் முழு சோதனைக்கு பிறகுதான் வெடிகுண்டு மிரட்டல் உண்மை நிலவரம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர்.