
சென்னை தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் ,நேதாஜி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் தனியார் உணவகத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா சேலையூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களின் மகள் சௌமியா (17) அரசு மகளிர் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல் நலம் பாதிக்கபட்டு இருந்த சௌமியா பள்ளிக்கு செல்லாததால் பெற்றோரிடம் ஆசிரியர் கண்டித்ததால் வீட்டிற்க்கு வந்த பெற்றோர் சௌமியாவை திட்டியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சௌமியா நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்ட அறையை சோதனை செய்த போது சௌமியா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர் அதில்” இனிமேல் நான் உங்களுக்கு செலவு வைக்கமாட்டேன் எனக்கு செலவு செய்யும் பணத்தில் வீட்டை கட்டி முடிக்கவும்” என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.