தாம்பரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டி படுகொலை

தடுக்க வந்த நாயையும் வெட்டி கொலை செய்த பெண்ணின் உறவினர்கள்

பீர்க்கண்காரணை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெருங்களத்தூர் குண்டு மேடு என்னும் பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குண்டுமேடு அருகே உள்ள சுடுகாட்டில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக பீர்க்கன்காரணை போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் கொலை நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஜீவா என்பது தெரியவந்துள்ளது .

கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்…

போலீசார் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜீவா குண்டு மேடு முத்தமிழ்நகர் அண்ணா தெருவில் உள்ள பெண்ணை காதல் செய்த விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் ஜீவாவை கொலை செய்து இருப்பதாக என போலீசார் விசாரித்து வருகிறார்கள்,

கேவிந்தன் என்பவர் அவர் மகன்கள், மகள்களுடன் தலைமறைவாகியுள்ளனர்.