தாம்பரம் அடுத்த முடிச்சூர் குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன்.
இவர் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் வழக்கம் போல தனது வீட்டில் இருந்து பல்சர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு இரவு இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார்.
காலையில் பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன் அங்க பொருத்தப்பட்டு இந்த சிசிடிவி கேமரா பார்க்கும்போது அதில் காலையில் மர்ம நபர் ஒருவர் நடந்து வந்து இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்துள்ளார்.