திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த 51- வது வார்டு சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் நிரஞ்சனா ஜெகதீசன் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பில் வெளியிட்டுள்ளார்.