நெல்லூர்
டிசம்பர் 22

விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்டு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(22.12.23) இரவு 7.50 க்கு நெல்லூருக்கு வந்தது.
இந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளும் ரிசர்வேசன் வசதி கொண்டவை.

நெல்லூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு முன்பதிவு செய்தவர்கள்
ஒவ்வொரு பெட்டியிலும் 20 முதல் 25 பேர் வரை ஏறுவதற்கு தயாராக நின்றிருந்தனர். இவர்களில் வயதானவர்களும் கைக்குழந்தைகளை வைத்திருந்த பெண்களும் இருந்தனர்.

நெல்லூரில் ரெயில் நின்றதும், ஏறக்குறைய இதே எண்ணிக்கை கொண்ட
பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கினர். பெரும்பாலான பெட்டிகளில் பயணிகள்
இறங்கி ஏறிமுடிப்பதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

D1 பெட்டியில் மட்டும் சென்னைக்கு முன்பதிவு செய்திருந்த 10
பயணிகளால் ரெயிலில் ஏறமுடியவில்லை.

சில குடும்பங்களில் பாதிபேர் ரெயிலிலும் மீதி பேர் நிலையத்திலும் மாட்டிக்கொண்டு
விக்கி வெலவெலத்து நின்றனர்.

இதே போல பல பெட்டிகளில் முன் பதிவு செய்து பாதிக்கப்பட்ட சுமார் 50பேர்
ரெயில் நிலைய அதிகாரியிடம் முறையிட்டு தங்கள் வேதனையை தெரிவித்தனர். சூழ்நிலையை கவனித்து 2 நிமிடம் அவகாசம் கொடுக்க வேண்டாமா? இந்த இரவு நேரத்தில் எவ்வளவு பெரிய மன உளைச்சலை ரெயில்வே நிர்வாகம் கொடுத்துள்ளது என்று சிலர் சத்தம் போட்டனர்.