சென்னை கோபாலபுரத்தில் உள்ள மேனகா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் 70 பேர் கொண்ட குழு உலக சாதனை நிகழ்ச்சி ஒன்றினை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நூலக வளாகத்தில் நிகழ்த்தியது. ரங்கோலி, கொலாஜ் மற்றும் பெயிண்டிங் என மூன்று வகைகளில் சிறுவர்கள் நடுவயதினர் பெரியவர்கள் என்று மொத்தம் 70 பேர் செங்கோட்டையில் தேசிய கொடி என்ற தலைப்பிலான வண்ண படத்தை 44 நிமிடங்கள் என்ற திட்டமிடப்பட்டு சுமார் 37 நிமிடங்கள் 21 வினாடிகளிலேயே உருவாக்கி உலக சாதனை நிகழ்ச்சியை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் இயக்குனர் மற்றும் பேராசிரியர் டாக்டர் என். ஆர். பானு மூர்த்தி, சங்கர நேத்ராலயா கண் சிகிச்சை நிபுணரும், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் தலைமைப் பேராசிரியருமான டாக்டர் நிர்மலா சுப்ரமணியன்,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் டாக்டர் கே. தியாகராஜன், தொடக்க கல்வி இயக்குனர் டாக்டர் p.a நரேஷ், அண்ணா நூற்றாண்டு நூலக தலைமை அலுவலகம் மற்றும் தகவல் அலுவலருமான டாக்டர் எஸ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியினை முன் நின்று சித்ரா மாய், கே சாலமன் தினேஷ் மற்றும் டாக்டர் பி கே எஸ் தேவகி ஆகியோர் வழி நடத்தினர். இந்தப் போட்டியின்
நெறியாளராக இருந்த மேனகா நரேஷ் மாண்புமிகு முதல்வரிடம் பூம்புகார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.