
காலாவதியான எம்.எல்.ஏ களை கட்சியில் சேர்ந்துவிட்டு அண்ணமலை பகல் கனவு காண வேண்டாம். அதிமுக பலவீனமடைந்த நிலையில் 10 அல்ல 100 முறை தமிழகத்திற்கு மோடி வந்தாலும் கால்பதிக்கமுடியாது. வெள்ளத்தை சரியாக கையாண்டதாக மத்திய குழு தெரிவித்து சென்ற நிலையில் சல்லிகாசு கொடுக்காம குறையை மட்டும் மோடி சொல்கிறார் அப்துல்சமது பேச்சு:-
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் “வெல்லட்டும் இந்தியா” என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மமக பொதுச்செயலாளர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
அப்போது பேசிய மமக பொதுச்செயலாளரும், மணப்பறை சட்டமன்ற உறுப்பினரான அப்துல்சமது:-
அதிமுக பழனிச்சாமி பலவீனப்பட்டுள்ளதால் மிகப்பெரிய ஆர்வத்துடன் மோடி தமிழகத்திற்கு தொடர்ச்சியாக வந்து கொண்டுள்ளார்.
பல கோடிகள் செலவு செய்து அண்ணாமலையை வைத்து நடைப்பயணம் மேற்கொண்டு மாயை தோற்றத்தை ஏற்படுத்தினாலும் காலாவதியான எம்.எல்.ஏ களை டெல்லிக்கு அழைத்து சேர்த்தனர்.
மழைவெள்ளத்தில் திமுக செயல்படவில்லை என சொல்ல என்ன யோகிதை உள்ளது. மத்தியகுழு ஆய்வு செய்து மழை வெள்ளத்தை சரியாக கையாண்டதாக கூறி சென்றனர். ஆனால் சல்லி பைசா கொடுக்காமல் மக்களை வஞ்சித்த மோடி குறைமட்டும் கூறுவதா அதனால் தான் 10 முறை அல்ல 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியாது என்றார்.
அதிமுக முழுவதும் சிதைந்தாலும் ஒருவர் கூட பி.ஜே.பி க்கு போகமாட்டார்கள். பிஜேபி கட்சி பலப்படும் என அண்ணாமலை பகல் கனவு காண வேண்டாம். நடை பயணம் அல்ல துணிகளை களைந்து உருண்டளும் இந்த தமிழ் மண்ணில் பிஜேபி வேர் பிடிக்க முடியாது. விஷ செடியை தமிழகத்தில் வளரவிடமான் தமிழன் என்றார்.