கியர் வண்டி ஓட்ட தெரியாத திருடன், கியர் இல்லாத ஸ்கூட்டி பெப் வாகனங்களை மட்டும் 50 வயதில் திருட தொடங்கி 60 வயதில் சென்னை மற்றும் புறநகரில் 64 வாகங்களை திருடிய நிலையில் சிறைசென்றான்.

தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவு திருடு போன நிலையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர்.

குறிப்பாக பார்கிங் அல்லாத பொது இடங்களில் நிறுத்தும் ஸ்கூட்டி பெப் என்கிற வகை இருசக்கர வாகனங்கள் தொடர்சியாக அதிக அளவு திருடு போன நிலையில் இரண்டு இடங்களில் கைபற்றிய சிசிடிவி காட்சிகளின்படி தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக ஊரபாக்கம் வரை முதியவர் ஒருவர் மித வேகத்தில் ஓட்டி சென்றதும் அதன் பின்னர் அந்த நபர் காணாமல் போனார். இதனால் உஷாரான தனிப்படை போலீசார் ஊரபாக்கம் பகுதியில் அதிக கவனமெடுத்து கண்காணித்தனர்.

அப்போது அங்கு ஸ்கூட்டி பெப் வாகனத்தில் வந்த முதியவரை நிறுத்தி விசாரத்தபோது ஹெரிஹரன் வயது-(60) என்பதும் தேனம்பேட்டை போயாஸ் கார்டன் பகுதியில் வசிப்பதாக கூறினார்.

ஆனாலும் சந்தேகம் அடைந்த போலீசார் சிட்லபாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் பரணிதரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைரேகை, பழைய குற்றவாளிகள் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடும் பலே குற்றவாளி என்பதும் இவன் மீது சூளைமேடு, மாம்பலம், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், சேலையூர், செங்கல்பட்டு என பல்வேறு காவல் நிலையங்களில் கியர் இல்லாத 50கும் மேற்பட்ட டி.வி.எஸ் இருசக்கர வாகனங்களை 10 ஆண்டுகளாக திருடி சிறை சென்றவன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் பாணியில் தரையில் அமரவைத்து விசாரித்து போது, இவனுக்கு கீயர் உள்ள இருசக்கர வாகனங்கள் ஓட்டத்தெரியாது. அதனால் பொது இடங்களில் நிறுத்தி செல்லும் ஸ்கூட்டி பெப் வாகனங்களை நோட்டமிட்டு அதன் மீது சிறிது நேரம் அமர்ந்து இருப்பதும், அதனை தொடர்ந்து இன்ஞின் ஒயரை துண்டித்து நேரடியாக இணைப்பு கொடுத்து தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் ஓட்டி செல்வார் ஊரப்பாக்கத்தில் வீடு எடுத்து அதன் அருகே வரிசையாக வாகனத்தை நிறுத்திவைக்கும் இவன் திருவண்ணாமலை, வந்தவாசி போன்ற பகுதியில் ஊருக்குள் பால் வாகனமாக பயன்படுத்துவவர்களிடம் குறைவான விலைக்கு விற்பனை செய்து வந்தம் கூறியுள்ளான், அவர்களிடம் இருந்து 9 இருசக்கர வாகனமும் ஊரபாக்கம் வீட்டில் இருந்து 5 வாகனம் என 14 ஸ்கூட்டி பெப் வாகனங்களை கைப்பற்றிய சிட்லப்பாக்கம் தனிப்படை போலீசார் ஹெரிஹரனை குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதே வேளையில் பொதுமக்களும் ஆங்ஆங்கே சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் இதுபோல் குற்றவாளிகள் திருடி செல்ல வாய்ப்பு ஏற்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டனர்.

60 வயதில் தனக்கு ஓட்ட தெரிந்த கியர் இல்லாத ஸ்கூட்டி பெப் உள்ளிட்ட 64 இருசக்கர வாகனங்களை திருடி அதற்கான கிராமபகுயில் விற்ற பலே திருடனை பிடித்து சிறைக்கு அனுப்பிய போலீசாரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.