மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாக பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து.

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா?

-தலைமை நீதிபதி கேள்வி?.

ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும் முன்னர் அதனை ஆய்வு செய்யவும், அதுவரை அதை நிறுத்தி வைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

மாநில சட்டப்பேரவையை கூட்டுவதற்கே மாநில ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார்.

  • பஞ்சாப் அரசு.

அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதித்து வருகிறார்.

கடந்த முறை பஞ்சாப் சட்டப்பேரவை கூடிய போது நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை.

  • பஞ்சாப் அரசு

பஞ்சாப் மாநில அரசின் 7 நிலுவை மசோதாக்கள் மீதான நிலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

  • தலைமை நீதிபதி சந்திரசூட்.

இந்த வழக்கு விசாரணை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 10ம் தேதி விசாரணையின் போது தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா அரசுகள் தொடர்ந்த வழக்குகளும் விசாரணைக்கு வரக் கூடும் என தெரிகிறது.