ஆளுநர்‌ மாளிகையில்‌

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி அவர்களுடன்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையிலான அமைச்சரவை, குழு புகைப்படம்‌ எடுத்துக்கொண்டது.

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி அவர்களிடம்‌ ஆளுநர்‌ மாளிகையில்‌நடைபெற்ற பதவியேற்பு விழாவில்‌

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, மாண்புமிகு துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ அவர்களை அறிமுகம்‌ செய்து வைத்தார்‌. உடன்‌ தலைமைச்‌ செயலாளர்‌ நா. முருகானந்தம்‌, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி அவர்கள்‌ ஆளுநர்‌ மாளிகையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌

முன்னிலையில்‌ நடைபெற்ற பதவியேற்பு விழாவில்‌, வி. செந்தில்‌ பாலாஜி அவர்களுக்கு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சராகப்‌ பதவிப்‌ பிரமாணமும்‌, ரகசிய காப்புப்‌ பிரமாணமும்‌ செய்து வைத்தார்‌. உடன்‌ தலைமைச்‌ செயலாளர்‌ நா. முருகானந்தம்‌, இ.ஆப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

பட்டமளிப்பு விழாவில் ஆளுநருடன் பங்கேற்பேன்: பொன்முடி

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நானும் கலந்து கொள்வேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்து ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று ஆளுநர் மாளிகையில் போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.

உதகை ராஜ்பவனில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது

மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி “2021-ம் ஆண்டு நான் ஆளுநராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்சினைகள் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அவைகளின் தரமும் குறைந்து காணப்பட்டது. இது எனக்கு ஏமாற்றம் அளித்தது. இதனை சரி செய்து, ஒன்றிணைக்கவே துணை வேந்தர்கள் மாநாடு மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை தான் நமது […]

ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக புதுவை, தெலுங்கானா ஆளுநர் பொறுப்பு புதுவை, தெலுங்கானா ஆளுநர் பதவியை ராஜினாமாசெய்தார் தமிழிசை சவுந்தரராஜன் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடுவதால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை

சென்னை, காமராசர்‌ சாலையில்‌ நடைபெற்ற குடியரசு நாள்‌ விழாவில்‌, தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ஆகியோர்‌ பல்வேறு துறைகளின்‌ சார்பில்‌ அரசின்‌ திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின்‌ அணிவகுப்பினை பார்வையிட்டார்கள்

இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத்‌ தலைவர்‌ மு.அப்பாவு, அமைச்சர்‌ பெருமக்கள்‌, மாண்புமிகு சட்டப்பேரவை துணைத்‌ தலைவர்‌ கு. பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌

சென்னை, காமராசர்‌ சாலையில்‌ நடைபெற்ற குடியரசு நாள்‌ விழாவில்‌, தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ஆகியோர்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ, மாணவியர்களின்‌ ஆடல்‌ பாடல்‌ கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள்

இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத்‌ தலைவர்‌ மு.அப்பாவு, அமைச்சர்‌ பெருமக்கள்‌, சட்டப்பேரவை துணைத்‌ தலைவர்‌ கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்

சென்னை, காமராசர்‌ சாலையில்‌ நடைபெற்ற குடியரசு நாள்‌ விழாவில்‌, தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ஆகியோர்‌ பல்வேறு துறைகளின்‌ சார்பில்‌ அரசின்‌ திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின்‌ அணிவகுப்பினை பார்வையிட்டார்கள்

இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத்‌ தலைவர்‌ மு. அப்பாவு, அமைச்சர்‌ பெருமக்கள்‌, சட்டப்பேரவை துணைத்‌ தலைவர்‌ கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌