
கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) டவுன் நயாநகரில் சுக்தேவானந்தா சுவாமி மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் அபிநவ சித்தலிங்க சுவாமிஜி. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி மடத்தின் திருவிழா நடைபெற்றது. அந்த சமயத்தில் அபிநவ சித்தலிங்க சுவாமிஜி, எதிர்காலத்தை கணித்து அருள்வாக்கு கூறியிருந்தார்.
அதில் அவர், எதிர்வரும் நாட்களில் பலத்த தீவிபத்து ஏற்படும். அதுவும் விமான விபத்தில் சிக்கி பயங்கர தீப்பிடிக்கும். ஒரு நகரம் நாசமாகும் என்று கூறியிருந்தார். ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து பற்றி தான் சாமியார் கணித்து கூறியிருப்பதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர் கடந்த ஏப்ரல் 20-ந்தேதி கணித்து அருள்வாக்கு கூறிய சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது