
மேடே (Mayday): விமான பயணங்களின்போது நீங்கள் ஒருபோதும் கேட்கவே கூடாத வார்த்தை இதுதான். இன்ஜின் முழுமையாக செயலிழப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான மிகவும் அவசர சூழல்களில், பைலட்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். m’aidez என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து மேடே என்ற வார்த்தை உருவானது.
‘உதவி செய்யுங்கள்’ என்பதுதான் இந்த வார்த்தைக்கான அர்த்தம் ஆகும். உயிருக்கு ஆபத்தான அவசர சூழல் என்றால், ரேடியோ கால் தொடங்கும்போது, பைலட்கள் இந்த வார்த்தையை கண்டிப்பாக மூன்று முறை கூற வேண்டும். இப்படி ஒரு சூழல் ஏற்படக்கூடாது என்பதை குறிக்கும் விதமாகதான், இதனை நீங்கள் ஒருபோதும் கேட்க கூடாத வார்த்தை என தொடக்கத்தில் கூறினோம்.