
சென்னை விமான நிலைய எதிரே தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்
வாகனத்தை விட்டு தப்பி ஓடிய வாலிபர் திருடிக் கொண்டு செல்லும் பொழுது வாகனம் தீப்பற்றி எரிந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை
சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி இரு சக்கர வாகனத்தை சுமார் 25-வயது மதிக்க ஆண் நபர் ஓட்டுச் சென்றுள்ளார். அப்பொழுது பழைய விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது.
உடனே வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் அங்கிருந்து விரைந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் மல மலவென இருசக்கர வாகனம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே இதை பார்த்த ரோந்து பணியில் இருந்த மீனம்பாக்கம் போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருசக்கர வாகனம் மலவென கொழுந்து விட்டு எரிவதை பார்த்த மீனம்பாக்கம் போலீசார் மற்றும் பழைய விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தீ பற்றி இருந்து கொண்டிருந்த தீயினை அனைத்தனர். அதுக்குள் முற்றிலும் இருசக்கர வாகனம் எரிந்து எலும்பு கூடாக மாறியது.
இந்த தீ விபத்து குறித்து மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனத்தை ஒட்டி வந்த வாலிபர் யார்?எதற்காக வாகனம் தீ பற்றி எரியும் பொழுது தீயை அணைக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் திருடி செல்லும் போது வாகனம் தீப்பற்றி எரிந்ததா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.