தவெக பிரச்​சார ஸ்டிக்​கர்​களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்​கி​விட்​டு, விஜய் படம் மட்​டும் இடம் பெற வேண்டுமென தலைமை உத்​தர​விட்​டுள்​ள​தாக கட்​சி​யினர் தெரி​வித்​தனர். கும்​பகோணம் வட்​டம் தாராசுரத்​தில் தமிழக வெற்​றிக் கழகத்​தினர் வீடு​தோறும் ‘மக்​கள் விரும்​பும் உங்​கள் வேட்​பாளர் விஜய்’ என அச்​சிட்ட ஸ்டிக்​கர்​களை 300-க் ​கும் மேற்​பட்ட வீடு​களில் நேற்று முன்​தினம் ஒட்​டினர்.

இந்த ஸ்டிக்​கரில் விஜய் படத்​துடன், கட்​சி பொது செயலாளர் ஆனந்த் படமும் இருந்தது. தற்போது அதை நீக்கி விட்டு புதிய ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர்.