
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் வரிவிதிப்பை அறிவித்துள்ளது இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதன் அணுசக்தித் தொழிலுக்கு யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, அதன் மின்சார உற்பத்தித் தொழிலுக்கு பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்கிறது.
இந்த விவகாரத்தில், இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது. எந்தவொரு பெரிய நாடுகளின் பொருளாதாரத்தையும் போலவே, இந்தியாவும் தனது நாட்டின் நலன்களையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.