வட மாநிலங்களில் மோடி தலைமையிளான பாஜக கூட்டணிக்கு அதரவு சரிந்துள்ளது. 100 தொகுதியை பிடிப்பது கடினம் நெல்லிக்குப்பம் புகழேந்தி தாம்பரம் அருகே செம்பாக்கத்தில் திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் பேச்சு:-

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி ஆர் பாலு அவர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் செம்பாக்கம் தெற்கு பகுதி சார்பாக பகுதிகழக செயலாளர் இரா.சுரேஷ் ஏற்பாட்டில்,

பகுதி கழக அவைத்தலைவர் க.ராமச்சந்திரன் தலைமையில் செம்பாக்கம் பேரூந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இதில் தலைமை கழக பேச்சாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆர் எஸ் செந்தில்குமார், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், தாம்பரம் மாநகர பொருளாளர் கண்ணன் என்ற விஜயரங்கம் தலைமை பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன் பகுதி துணைச் செயலாளர்கள் லட்சுமிபதி ராஜா, தேவமுத்து என்கின்ற முருகன் கல்யாணி மணிவேல் இந்திய கூட்டணி கட்சியின் தோழமைக் கட்சி தலைவர்கள் செம்பக்கத்திற்கு பகுதி வட்டச் செயலாளர்கள் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அப்போது பேசிய நெல்லிக்குப்பம் புகழேந்தி :-

10 ஆண்டுகளாக பாஜக ஆட்சிபுரிந்தும் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் தான் ஏற்பட்டது. அதனால் மோடி தலைமையிலான பாஜக கூட்டணிக்கு வடமாநிலங்களில் அததவு பெரிய அளவில் சரிந்துள்ளது. ஒட்டுமொத்த நாட்டிலேயே 100 தொகுதியை வெற்றி பெருவதே கடினம் என்கிற வகையில் அங்குள்ள கருத்துகணிபுகள் வெளியாகி வருகிறது என்றார்.

தேமுதிக கட்சி சரிய காரணமாக அமைந்த அதிமுகவுடன் பிரேமலதா கூட்டணி அமைத்துள்ளது விஜயகாந்த் ஆன்மாவே ஏற்றுக்கொள்ளாது என்றார்.