
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிக ரான ரன்பீர் கபூர், கடைசியாக நடித்து வெளியான ‘அனிமல்’ படம் ‘ஹிட்’ அடித்த துடன், ரூ.1,000 கோடி வசூலை ஈட்டியது. இவரது மனைவி ஆலியாபட்டும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருவருக்கும் ராகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடி மும்பை யில் முக்கிய பகுதியாக திகழும் பாந்த்ரா வில் 6 மாடி கொண்ட பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளனர். கடந்த சில வருடங்களாக இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், இப்போது வீடு தயார் நிலைக்கு வந்திருக்கிறது.
ரூ.250 கோடியில்
கட்டப்பட்ட இந்த பிரமாண்ட வீட்டில் விரை வில் ரன்பீர் கபூர் தனது குடும்பத்துடன் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ரன்பீர் கபூர் வீடு கட்டி இருக்கும் அந்த இடம், 1980-களில் அவரது அப்பா ரிஷி கபூருக்கு, அவரது அப்பா ராஜ் கபூர் குடும்ப சொத்தாக பிரித்து கொடுத்தது ஆகும்.இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.