
போலி பெயர்களில் நிறுவனங்களை பதிவு செய்து 10,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கும்பலை நொய்டா போலீசார் கைது செய்தனர்.
போலியான நிறுவனங்களைப் பயன்படுத்தி அவர்கள் இ-வே பில்களை உருவாக்கி GST மோசடி செய்தது அம்பலம்
டெல்லி, நொய்டா, காசியாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சிந்த்வாரா (எம்.பி) ஆகிய இடங்களை சேர்ந்த 45 பேர் இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் உலோக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த சுகன்யா பிரபு (40) என்பவர் ஒரு வருடத்தில் 14.2 கோடி GST மோசடி செய்து பணம் பெற்றதாக கைது செய்து நொய்டா போலீசார் அழைத்துச் சென்றனர்.