பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அவர் X தளத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தேர்தல் பத்திரங்கள் என்பது மோடியின் மோசமான ஐடியா. அதன்மூலம் ஊழலுக்கு எதிரான பாஜகவின் கொள்கை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.

ஆகையால் மோடி பதவி விலக வேண்டும்” என்று சுப்ரமணியசாமி போஸ்ட் செய்துள்ளார்.