மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் திவ்யா எனும் பெண் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் வகை வளர்ப்பு நாயை கட்டுபாடு இன்றி சாலையில் திரிய விட்டதாக எழுந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகராட்சி கால்நடை மருத்துவர் சக்திதேவி, சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நேரில் விசாரணை,

நாயின் உரிமையாளர் திவ்யாவிற்கு 50 ஆயிரம் அபராதம் செலுத்த உத்திரவு

நாய் யாரையும் கடிக்க வில்லை வீட்டின் அருகே உள்ளவர்களுடன் பிரச்சனை உள்ளதால் நாய் மீது புகார் எழுப்பியுள்ளனர் என திவ்யா விளக்கம்

மேலும் திவ்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் முன்பாக விளக்கம் அளித்து அபராத விலக்கு கோரவுள்ளார்.