நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப., அவர்கள் தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதியில் அமைந்துள்ள MIT கல்லூரி வளாகத்தில் தூய்மையின் சேவைக்கான (Swachatta Hi Seva)விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.கருணாநிதி, மாநகராட்சிதுணை மேயர் திரு.கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் திரு.வே.கருணாநிதி, திரு.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேற்கு தாம்பரத்தில் நாய் தொல்லை பெண்ணுக்கு ஐம்பதாயிரம் அபராதம்

மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் திவ்யா எனும் பெண் தனது ஜெர்மன் ஷெப்பர்ட் வகை வளர்ப்பு நாயை கட்டுபாடு இன்றி சாலையில் திரிய விட்டதாக எழுந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகராட்சி கால்நடை மருத்துவர் சக்திதேவி, சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நேரில் விசாரணை, நாயின் உரிமையாளர் திவ்யாவிற்கு 50 ஆயிரம் அபராதம் செலுத்த உத்திரவு நாய் யாரையும் கடிக்க வில்லை வீட்டின் அருகே உள்ளவர்களுடன் பிரச்சனை உள்ளதால் நாய் மீது புகார் எழுப்பியுள்ளனர் என திவ்யா […]
போலீசாரை பாராட்டிய பொதுமக்கள்

தாம்பரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருவதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இதனால் சாலைகளில் பள்ளங்கள் பல இடங்களில் ஏற்பட்டுள்ளன. தாம்பரம் போலீசார் தார் கலவை கொண்டு பள்ளங்களை நிரப்பினார்கள். இதனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
சதுரகிரி மலைப்பாதையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்

மதியம் 12 மணி வரை மட்டுமே பேருந்துகள் சதுரகிரி மலைப்பகுதிக்கு வந்தடைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது சதுரகிரி மலை பாதையில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
இரும்பு தகடு விழுந்து பெண் பலி

இரும்பு தகடு சரிந்து விழுந்து நடந்து சென்ற 30 வயது பெண் பரிதாபமாக பலி. அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரேணுகா என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில்வசித்து வருகிறார். இவர் தரமணியில் உள்ள மென்பொருள் நிறுவனமான டிஎல்எப் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு எட்டு மணிக்கு பணி முடித்து வெளியே சென்ற போது. டிஎல்எப் வளாகத்தின் முன்பு இரும்பு பலகைகள் கட்டுமான பணிக்காக […]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதல்வர்,

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், போற்றுதலுக்குரிய எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க, தமிழகத்தில் விடியா தி.மு.க ஆட்சியில் தினம்தோறும் அரங்கேறும் கள்ளச்சாராய மரணங்கள், கொலை-கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், இளைய சமூகத்தினர் மத்தியில் வேகமாக பரவும் போதைப்பொருள் கலாச்சாரம், போன்று சமூக சீர்கேடுகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில்விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் அவர்கள் மற்றும் வட்ட கழக செயலாளர் […]
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான சேவை இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – அரசு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரான சுகாதாரத்துறையின் அரசாணை எண் 151ஐ உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட ஒருசில முதுநிலை படிப்புகளைத் தவிர, பிறதுறைகளில் அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்புகளை பயில்வதற்கான சேவை இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு மருத்துவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து பயில தடைவிதிக்கும் திமுக அரசின் இந்த பிற்போக்குத்தனமான நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய […]
மக்கள் குறைகளை தீர்க்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கோரிக்கை
அரசு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு மக்களின் குறைகளை போக்க வேண்டும் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற ஊரக பகுதி மனுநிதி மூகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் கேளம்பாக்கத்தில் ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போர் விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியகுழு தலைவர் எல் இதயவர்மன், கேள்ம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த […]
ரவுடிகளை ஒழிக்க ஆக்ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர் அருண்!

பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள் போலீசாரின் ரோந்து பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு! பணியில் சுணக்கம் காட்டும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.
புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை தயாராகி வருவதால், ஜூன் 5 முதல் 9-ம் தேதி வரை பொது மக்கள் பார்வைக்கு மூடப்படுவதாக அறிவிப்பு!..
