கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் இயங்கி வரும் இவருக்கு சொந்தமான கல்குவாரிகளில் விதிமீறல் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். சற்றுநேரத்திற்கு முன், அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சருக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.