சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்;

குடோனில் ராகி மாவுடன் போதைப்பொருளை கலப்படம் செய்து கடத்தியது சோதனையில் அம்பலமானது; நேற்று கைதான ஜாபர் சாதிக் கூட்டாளி அளித்த தகவலின்பேரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குடோனில் சோதனை

சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. தி.நகர் பசுல்லா சாலையிலுள்ள நரேஷ் என்பவரின் சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை. தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் நரேஷ்.

புதிதாய் சேர்ந்தவருக்கும் புறப்பட்டது ‘பிரச்னை’

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர், லாட்டரி மார்ட்டின் மருமகன். கடந்த சில மாதங்களுக்கு முன்தான் விசிகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் கியா கார் ஷோரூம் வைத்திருக்கும் அனீஸ் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை!

முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்!

முன்னாள் திமுக அமைச்சர் இடங்களில் சோதனை

கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் இயங்கி வரும் இவருக்கு சொந்தமான கல்குவாரிகளில் விதிமீறல் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். சற்றுநேரத்திற்கு முன், அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சருக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரை காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜிதின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

முகமது தாஜிதின் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான்காலித் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. ஹைதராபாத், லக்னோ வெடிகுண்டு தாக்குதல், போலி பாஸ்போர்ட் குறித்தும் விசாரணை!

கெட்டுப்போன இறைச்சி கிழக்கு தாம்பரத்தில் 2 உணவகங்கள் மூடல்

சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள 6 பெரியளவிலான அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா அதிகாரிகளுடன் தீவிர சோதனை நடத்தினார்.. அப்போது கெட்டுபோன உணவுகள், அழுகிய மற்றும் பழைய இறைச்சிகள், தவறான முறையில் பதபடுத்தபட்ட மற்றும் தடை செய்யபட்ட மசாலாக்கள், செயற்கை உணவு வண்ண பொடிகள் போன்றவறை குப்பையில் கொட்டி அழித்தார். பின்னர் சுகாதாரமற்று நடத்தபட்ட 2 உணவகங்களை மூடியும், உரிமம் இன்றி நடத்தபட்ட ஒரு உணவகத்திற்கு விற்பனை […]

அருண் அசோசியேட் நிறுவனத்தில் ED அதிகாரிகள் சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தினர் கரூரில் கட்டிவரும் பங்களா கட்டுமான பணியில் தொடர்புள்ள அருண் அசோசியேட் நிறுவனத்தில் ED அதிகாரிகள் சோதனை. கோவை- திருச்சி சாலையில் உள்ள அருண் பிரசாத் அலுவலகத்தில் CISF உதவியுடன் சோதனை