நாளை ஜூன் 24 முதல் கேரளா மற்றும் தமிழக மலையோர பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்படுகிறது.

கேரளாவை எல்லையாக கொண்ட தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை தென்காசி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

இம் மாவட்டங்களில் நாளை முதல் 5 நாட்களுக்கு விட்டு விட்டு மிதமான மழை பெய்யும். வால்பாறை நீலகிரி தவிர வேறு எங்குமே கனமழைக்கு வாய்ப்பு இல்லை.

தென்காசியை பொறுத்தவரை அடுத்த 5 நாட்களுக்கு விட்டு விட்டு தொடர் சாரல் மழை பெய்யும். குற்றால சீசன் மேலும் களைகட்டும். அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.