குரோம்பேட்டை வார்டு 23,24,25,26 பகுதிகளில் கட்டுமான நிறுவனங்களால் சாலையில் திரும்பும் இடங்களில் எல்லாம் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மின் கம்பங்களிலும், இன்டர்நெட் சேவை கம்பங்களிலும் 300க்கும் அதிகமான விளம்பர பதாகைகள் மற்றும் அட்டைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இவை அந்த பகுதியை அசிங்கமாகவும்/அலங்கோலமாகவும் ஆக்குகின்றன. என அறப்போர் இயக்கத்தை சேர்ந்த டேவிட் மனோகரன் புகார் கூறியிருந்தார். உடனடியாக மாநகராட்சியின் மண்டலம் 2 & 3 நகர அமைப்பு ஆய்வர்கள், அலுவலர்கள் மற்றும் ராதா நகர் மின்வாரிய துணை பொறியாளர் களத்தில் இறங்கி சுமார் 150 பதாகைகளை அகற்றினர்.இதனை வரவேற்ற டேவிட் மனோகரன் மாநகராட்சியும், மின்வாரியமும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இந்த பதாகைகள் இரவு நேரத்தில் தான் கட்டப்படுகின்றன. மேலும் இந்த பதாகைகளை அகற்ற மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலக நேரங்களை வீணாக செலவிட நேரிடுகிறது. அதனால் இந்த நிறுவனங்களுக்கு மாநகராட்சியும் மின்வாரியமும் அறிவிப்பு வழங்கி இவர்களிடம் அபராதம் விதித்து அதை வசூலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.