
குரோம்பேட்டை நியூ காலனி ஆறாவது குறுக்கு தெருவில் திடீரென்று மாநகராட்சி அவசரமாக ஒரு கால்வாயை அமைத்துள்ளது. இந்த கால்வாய் சீராக கட்டப்படவில்லை. கோணலும் மாநலுமாக இருக்கிறது. முறையாக கட்டப்படவில்லை. கால்வாயை எந்த இடத்தில் இணைப்பது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். அந்தக் கால்வாய் மூடப்படவும் இல்லை. அப்பகுதியில் உள்ள மக்கள் அந்தக் கால்வாயை தாண்டித்தான் வெளியே வர வேண்டும். இது குறித்து சமூக ஆர்வலர் வி.சந்தானம் கூறும்போது தனியார் பரிசோதனை நிலையம் ஒன்றிற்காக இப்படி அவசரமாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களும், வயதானவர்களும் வீட்டிலிருந்து வெளியே வர மிகவும் சிரமப்பட்டு தாண்டி வருகின்றனர்.