
பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சிங்கார சென்னை 2.0 நிதியின் கீழ் 2 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் தளம், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டாம் தளம், என மொத்தம் 4 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை திறந்து வைததார். இந்நிகழ்வின்போது,
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர
சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கலாநிதி வீராசாமி, திரு.ஆர்.கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.தாயகம் கவி, திரு.ஜோசப் சாமுவேல், துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் திரு.ப.ரங்கநாதன், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் நீரேற்று வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.டி.ஜி.வினய், இ.ஆ.ப., நகர் ஊரமைப்பு இயக்கத்தின் இயக்குநர் திரு.பி.கணேசன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.