தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்‌ முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப்‌ பயணமாக அமெரிக்கா நாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார்‌. இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்‌ திரு.துரைமுருகன்‌ உள்ளிட்ட மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்‌ உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.