
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, திருநெல்வேவி மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி ஆகியோர் உள்ளனர்.