தாம்பரம் அருகே குடியிருப்பு மாடிகளில் உள்ள மின் விளக்குகளை அனைப்பதற்காக மாடி விட்டு மாடி தாவிய வடமாநில இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேப்பாளம் மாநிலத்தை சேர்ந்தவர் பிரேம் கட்டி (33) கடந்த ஒன்பது வருடங்களாக தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நுதஞ்சேரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியுருப்பில் ஒன்பது வருடங்களாக செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் வழக்காம அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ள முதல் மாடி மின் விளக்குகளை மாடி விட்டு மாடி தாவி அனைக்கும் பழக்கம் உள்ளவர் என்று குடியிருப்பு வாசிகள் கூறும் நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் மின்விளக்குகளை அனைப்பதற்காக மாடி விட்டு மாடி தாண்டும் பொழுது தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று காலை செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்க்கு சென்ற பெண் ஒருவர் பிரேம் கட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து குடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.