
ரோபோகளை போருக்கு பயன் படுத்துவதை விட மருத்துவத்திற்கு பயன்படுத்துவதே மானுடத்தின் பெருமை, அப்படி முன்னோடியாக செயல்படும் மருத்துவர்களையும், கிராமப்புரங்களின் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களையும் வணங்குகிறேன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேச்சு:-
சென்னை பாலவாக்கத்தில் கிளெனிக்கல் ஹெல்த்சிட்டி மருத்துவமனை சார்பாக நான்காம் தலைமுறை மருத்துவ அறுவை சிகிச்சை ரோபோட்டிக் மூலம் ஒரே ஆண்டில் 100 புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை புரிந்ததை பாராட்டும் நிகழ்சி நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கலந்துக்கொண்டு 100 புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு உதவிய ரோபோடிக் அறிமுகம் செய்தார்.
அப்போது பேசிய கமலஹாசன்:-
கிரமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் முதல் மறியாதை மருத்துவர்களுக்குதான், அதன் பின்னர் ஆசிரியர்கள் போற்றத்தக்கவர்கள், இன்றளவும் கிராமங்களில் 5 ரூபாய்க்கும், ஒரு ரூபாய்க்கும் மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள் அவர்களை வணங்குகிறேன்.
என் வாழ்வில் நோயாளியாக இல்லாமால் நன்பர்களாக பல நல்லவர்களை சேர்ந்துகொண்டுள்ளேன். இளையராஜா போன்றோரும் அப்படிதான் இங்கு மேடையில் உள்ள மருத்துவர்களும் நண்பர்களாக சேர்ந்தவர்கள் தான்,
நாங்கள் ரோபோகளை மக்கள் சந்தோஷத்திற்காக பயன் படுத்துகிறோம். நல்ல முறையில் பயன் படுத்துவது நல்லது.
ரோபோகளை போரூக்கு பயன் படுத்துவதை விட மருத்துவத்திற்கு பயன்படுத்துவதே மனுடத்திற்கு பெருமை, முன்னோடியாக திகழும் மருத்துவர்களை நான் வணங்குகிறேன் என்றார்.
பின்னர் 100 புற்றுநோய் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்.எஸ்.ராஜாசுந்திரம் உள்ளிட்ட மருத்துவ குழுவினரை பாராட்டி அவர்களுக்கு நினைவு பரிசுகளை கமலஹாசன் வழங்கினார்.