
சென்னை அருகே பொன்மாரில் மதபோதகர் அவர் மனைவியின் கழுத்து நெரித்து கொலைசெய்த நிலையில் உடல் நிலை பாதித்ததாக கூறி இறுதி சடங்கு செய்யமுயன்றபோது பெண் வீட்டார் சாவில் சந்தேகம் என கூறியதால் பிடிபட்டார்.
திருமணத்திற்கு முன்பு ஏற்பட்ட காதல் குறித்து பேசியபோது கணவன் மனைவி இருவருக்கு சண்டை ஏற்பட்டுள்ளது.
தாழம்பூரை அடுத்த பொன்மாரில் உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ திருச்சபையில் துனை மதபோதகராக உள்ளவர் விமல்ராஜ்(35) இவர் மனைவி வைஷாலி(33) மும்பையில் பூர்விகமாக கொண்ட வைஷாலிக்கு தமிழ் குடும்பம் என நண்பர்கள் மூலம் அறிமுகமான நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 11மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பொன்மாரின் தனி வீட்டில் வசித்த தம்பதியினர் நேற்று முந்தினம் பழைய கதைகளை பேசி திருமணத்திற்கு முன்பு ஏற்பட்ட காதல் அனுபங்களை பேசியுள்ளனர். அப்போது குழந்தையை வைஷாலி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் விமராஜ் மனைவி வைசாலியை அடித்துள்ளார்.
இதில் மூச்சுவாங்கி துடித்த வைஷாலியின் வாயில் துணியை வைத்து கழுத்து நெரித்துள்ளார். அதன் பின்னர் தன் பெற்றோர்கள் வசிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்யமுயன்றார்.
இந்த தகவல் அறிந்த வைஷாலியின் சகோதரர்
காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த நிலையில் வைஷாலி பிரேதத்தை கைப்பற்றிய தாழம்பூர் போலீசார் விசாரணையில் விமல்ராஜ் குற்றத்தை ஒப்புகொண்டதால் கைது செய்து நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.