
விஜய் மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வருவதாகவும், பிறகு புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாகவும் தெரிகிறது.
இதையடுத்து 5 மணியளவில் விஜய் தனது உரையை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த மாநாட்டிற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை நடைபெறும் த.வெ.க. மாநாட்டுக்கு மதியம் 2 மணி நிலவரப்படி 2 லட்சம் தொண்டர்கள் மாநாட்டு திடலில் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .