இந்து முன்னணி மாநாட்டில் அறுபடை வீடுகள் காட்சி .

மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி அறுபடை வீடுகளை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று திறந்து வைத்தார்.இதனை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆறு கோடி வீடுகளில் மூலவர் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் -அமித்ஷா உறுதி

மதுரையில் நடந்த பாஜக மாநாட்டில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது 2025 ம்ஆண்டு மிகப்பெரிய சாதனை படைத்தோம். டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சியை முடித்து, 27 ஆண்டுக்கு பிறகுெல்லியில் பா.ஜ.க, ஆட்சி அமைத்து உள்ளது. 2025 ல் டெல்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ, 2026ல் தமிழ்நாட்டி ஆட்சி அமைப்போம். 2026 ல் நடக்கும் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார் இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை […]

அழகர் ஆற்றில் இறங்கினார் மதுரை குலுங்கியது

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 6 மணி அளவில் நடைபெற்றது பச்சை பட்டு உடுத்தி அழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து பக்தி முழக்கமிட்டனர்.ஆழமான பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.பக்தர்கள் கூட்டத்தால் மதுரை குலுங்கியது

குண்டோதரர்களுக்கு விருந்து

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சுந்தரர் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வைபவம் முடிந்து குண்டோதரர்களுக்கு விருந்து படைத்தல்வைபவம் நடைபெற்றது இதில் பெரிய இலையில் உணவுகள் படைக்கப்பட்டு இருப்பதை பக்தர்கள் திரளாக கண்டுகளித்தனர்

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் பக்தர்கள் பரவசம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருமணமான பெண்கள் புதுத்தாலி அணிந்து கொண்டனர்அதற்கு முன்பாக அதிகாலை 4 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேசுவரர் நான்கு மாசி வீதீகளில் எழுந்தருளினர்.

ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் மதுரை – சென்னை வைகை விரைவு ரயில் காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில் ஆகிய 5 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

நடிகை கஸ்தூரி ஜாமின் மனு தள்ளுபடி

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு; உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். அவர் தனது சுய நலனுக்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தனது தவறை மறைக்கும் விதமாக லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலம் முடிந்தது. ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது. அதில் வனஸ்பதி கலந்து இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு […]

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் பணியிடை நீக்கம்

அரசு நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களின் மீது அடக்குமுறையை கையாளும் திமுக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உசிலம்பட்டி தாலுக்கா கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து மதுரை ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பாலில் தண்ணீர் கலப்படம் செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆவின் பால் குளிரூட்டும் மையங்களில் நடக்கும் தண்ணீர் கலப்படம் தொடர்பாக எழுந்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆவின் […]