ஓமன் நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான ‘ஓமனின் முதல்தர விருது (The First Class of the Order of Oman – தி ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன்) வழங்கி மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் கௌரவப்படுத்தினார்.

இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 29 ஆவது வெளிநாடுகளின் உயரிய விருதாகும். மேலும், ராணி எலிசபெத், நெதர்லாந்து ராணி மாக்ஸிமா, நெல்சன் மண்டேலா, பேரரசர் அகிஹிட்டோ மற்றும் ஜோர்டானின் மன்னர் அப்துல்லா ஆகியோருக்குப் பின்னர் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.