மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை தபால் நிலையத்தில் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில் சமூக சேவகர் வி.சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் மற்றும் போலீஸ் கிருஷ்ணமூர்த்தி அட்வகேட் ராமதாஸ், பாலு கலந்து கொண்டனர். போஸ்ட் மாஸ்டர் மூர்த்தி வரவேற்றார். இறுதியாக மக்கள் தொடர்பு அதிகாரி கிருஷ்ணன் நன்றி கூறினார். சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வேன் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதி மொழியை வி.சந்தானம் கூற தபால் நிலைய ஊழியர்கள் படித்தனர்.