தமிழர் திருநாளான பொங்கல் 2026 ஜனவரி 14 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய இன்று காலை 8 மணி முதல் முன்பதிவு துவங்கியது.

60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஜனவரி 9 முதல் ஜனவரி 18 வரை பயணிக்க விரும்புவர்கள், அதற்கேற்ப நவம்பர் 10 முதல் 19 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமும் காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே தங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.