
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகேயுள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த மயில்வேல் என்பவர் கடந்த ஏழாம் தேதி, சத்தரைக் கிராமத்திலுள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மயில்வேலின் இறுதி ஊர்வலத்தையொட்டி, அவரின் அண்ணன் மகனும் ரௌடியுமான பாபா என்கிற வினோத் மற்றும் இவரின் கூட்டாளிகளான முகிந்தர், பிரவீன்குமார் ஆகிய மூன்றுபேரும் சேர்ந்து, கஞ்சா போதையில் அப்பகுதியிலுள்ள கடைகளை அடைக்குமாறு, அட்டூழியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.