
தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூரில் மும்மத பிராத்தனையுடன் ஒருகோடி 40 லட்சம் செலவில் குளம் சீரமைக்கும் பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தார்.
தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மங்கலேரி குளத்தை ஒருகோடி 40 லடசம் மதிபீட்டில் ஆழப்படுத்தி கரைகளுடன் 400 மீட்டர் நடைப்பாதை, சுற்றுசுவர், 20 பேர் அமரும் விதமாக இருக்கைகள், மரங்கள் நடுவு உள்ளி சீரமைக்கும் பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்தார்.
இதில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் ஜி.காமராஜ், மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், கவுன்சிலர்கள் எஸ்.சேகர், பெ.புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில்
பணி துவக்கம் காரணமாக இந்து, முஸ்லிம், கிறித்தவ மும்மத பிராத்தனைகள் செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது.