தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகரில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். புயல் மழையில் வீடுகள் முழுகியது. தங்கியவர்களை மட்டும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பிய அவர்களுக்கு நேற்று முந்தினம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் ஆசிரியர்கள் உணவு, குடிநீர் வழங்கினார்கள்.

அப்போது “4ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரி தங்களின் நோட்டு புத்தகம் முழுவதும் நனைந்துவிட்டது. உடைகளும் இல்லை என வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்று அச்சங்கம் சார்பில் 10க்கும் மேற்பட்ட ஆசியர்கள் ஒரு லட்சம் மதிப்பீட்டில் மழலை பள்ளி முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 162 மாணவர்களும் அவர்கள் கொண்டு செல்லும் புத்தகங்களுக்கு ஏற்றார்போல் புத்தக பை, நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட எழுது பொருள்களை அவர்கள் தங்கிய பகுதிக்கு சென்று வழங்கினார்கள்.

அப்போது அங்கு திரண்ட பெற்றோர்கள் உதவிய ஆசிரியர்களுக்கும், கோரிக்கைவைத்து கேட்டு பெற்றுதந்த மாணவன் மாரிக்கும் நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன்:- தமிழக அரசும் பள்ளி கல்வித்துறையும் மாணவர்களின் மனதை அறிந்து அரையாண்டு தேர்வுகளை தள்ளி வைத்துள்ளது, நாங்களும் கடும் புயல் மழை பாதிக்கப்பட்டு பள்ளி வரும் மாணவர்களுக்கு பாதிப்பில் இருந்து மனரீதியாக பயிற்சியும் எதிர்கொள்ளும் பக்குவதையும் எடுத்துகூறவுள்ளதாகவும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.