சென்னையில் தங்கத்தின் விலை இன்று ரூ. 2,800 அதிகரித்துள்ளது.தொடர்ந்து இன்று(ஜன. 21, புதன்கிழமை) காலை 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 350 உயர்ந்து ரூ. 14,250 -க்கு விற்பனையாகிறது.
அதேபோல வெள்ளி விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 340-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,40,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.