இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி சார்பில் மண்டல பயிலரங்கம் தாம்பரத்தில் அதன் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துக்கொண்டனர்.

பேசிய காதர்மொகிதீன்:-

குரானிலும் நபிகள் சொன்னதுபோல் திராவிட மாடல் ஆட்சிக்கு பொருத்தமான உள்ளது. இது தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் நல்லாட்சி வரவேண்டும் என விரும்பிதான் தமிழகத்தில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் உள்ளோம் எனவே ஜெய் இந்தியா என்கிற கோஷங்களுடன் ஆட்சி சைத்தானாக உள்ளதை வெளியேற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பதிவு செய்து வெற்றிபெருவோம். பாஜகவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர்மொகிதீன்:- இந்தியா முழுவதும் பன்முக தன்மையுடன், கலாச்சார, பண்பாடு என செயல்படும் நிலையில் பாஜக அரசு சாசனத்தில் சொல்லப்பட்ட மாநில உரிமைகள், சிறுபான்மையினர், தாழ்தப்பட்டவர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாகவும் பாஜக அரசு செயல்படுகிறது. அதனால் பாஜக வெற்றிபெறகூடாது என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு:-

இந்தியா கூட்டணி பலமாக உள்ளது. இதில் 26 கட்சிகள் உறுதியாக உள்ளது ஒன்று இரண்டு கட்சிகள் தேர்தல் கூட்டணியின் போது பிரச்சனை எழுவது வழக்கம் தான்,

நாளை இந்தியா கூட்டணியினர் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுகவுடன் காலம் காலமாக ஒன்றாக உள்ளது. கன்னியத்திற்குறிய காயிதேமில்லத், அண்ணா, கலைஞர் காலம் தொட்டு கூட்டணி தொடர்கிறது. அவர்களுக்கு ஒன்று என்றால் திமுக ஓடோடி சென்று செயல்படும்.

திமுக தலைவர் வெளிநாடுகளுக்கு முதலீடு பெற்றுவர சென்றுள்ளார். அவர் திரும்பி வந்தவுடன் அவரே தெரிவிப்பார் என தாம்பரத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேட்டியளித்தார்.