பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பாமக நிர்வாகிகள் 50 பேர் கூண்டோடு ஆலந்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவின் இனைந்தனர்.

பாஜகவுடம் பாமக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதால் அதற்கு விரும்பம் இல்லாத காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பாமக செயலாளர் சத்தியா, ஒன்றிய பாமக துணைத் தலைவர் கார்திக், ஒன்றிய பாமக துணைச் செயலாளர் ஸ்ரீராம், ஒன்றிய பாமக இளைஞரணி துணை செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50 நிர்வாகிகள் கூண்டோடு திமுகவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலஷ்மி மதுசூதனன், முன்னால் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன், ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆலந்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் திமுக கரை வேட்டிகளை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.